Begin typing your search above and press return to search.
பாஜக தலைவர்-மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை !
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
By : G Pradeep
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள லால் சவுக் பகுதியில் இன்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குல்காம் மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் ரசூல் டார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பனோ ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ரசூல் டார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பனோ ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
பாஜக தலைவர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Next Story