'ஊழலுக்காக சத்தியாகிரகம் நடந்தால் எப்படி இருக்கும் என்பது உலகம் பார்க்கிறது' - காங்கிரஸ் கட்சியை சாடிய பா.ஜ.க தலைவர்
'500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ராகுல்காந்தி அமலாக்கப்பிரிவு விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்' என பா.ஜ.க தலைவர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.

By : Mohan Raj
'500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ராகுல்காந்தி அமலாக்கப்பிரிவு விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்' என பா.ஜ.க தலைவர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்காக அமலாக்க இயக்குனரகம் ராகுல்காந்தி நேற்று ஆஜராகியுள்ளார் இந்த வழக்கு விசாரணையை மத்திய ஆளும் பா.ஜ.க அரசு உளவுத்துறை நகர்த்திக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் குறைகூறி பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் சம்பத் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'ஊழலுக்காக சத்தியாகிரகம் நடந்தால் எப்படி இருக்கும் என்பது உலகம் பார்க்கிறது' என்றார்.
'மகாத்மா காந்தி உலகை உண்மைக்காக போராடக் கற்றுக் கொடுத்தார் ஆனால் காங்கிரஸ் ஊழலை கொண்டாடவும் அதற்காக போராடவும் கற்றுக்கொடுக்கிறது' என்றார்
ராகுல் காந்தி ஏற்கனவே ஜாமீனில் தான் இருக்கிறார் இது அரசியல் வழக்கு அல்ல காங்கிரஸ் தனது ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்தி போராட வைத்திருக்கிறது. 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக செய்ததாக ராகுல்காந்தி அமலாக்கப்பிரிவு மனு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்' எனவும் கூறினார்.
