Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு உதவ பா.ஜ. சார்பில் 'ஹெல்ப்லைன்.!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பா.ஜ. இளைஞர் அணி சார்பில் ஹெல்ப்லைன் வசதி துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு உதவ பா.ஜ. சார்பில் ஹெல்ப்லைன்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 April 2021 12:43 PM IST

கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக பாஜக இளைஞரணி சார்பில் 'ஹெல்ப்லைன்' தொலைப்பேசி வசதியை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.





இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பா.ஜ. இளைஞர் அணி சார்பில் ஹெல்ப்லைன் வசதி துவக்கப்பட்டுள்ளது. '080 6817 3286' என்ற எண்ணை, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்தார்.





இதன் பின்னர் அவர் பேசும்போது, நாட்டின் எந்த மூளையில் வசித்து வந்தாலும், ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலமாக கொரோனா தொற்றுக்கு தேவையான உதவிகளை கோரலாம். அவர்களுக்கு தேவையான உதவிகளை பாஜக தொண்டர்கள் செய்வார்கள். இதில் 350க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தொலைபேசி எண்ணும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News