ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களை பிடித்து 2-வது பெரிய கட்சியாக முன்னேற்றம்.!
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களை பிடித்து 2-வது பெரிய கட்சியாக முன்னேற்றம்.!

By : Rama Subbaiah
தெலங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் சென்ற டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலங்கானா சந்திரசேகர் ராவின் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசி கட்சியான எஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலுக்கு முன் வந்த கணிப்புகள் படி பாஜக மாநகராட்சியை கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டன.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 150 இடங்களுக்குமன முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்குச்சீட்டு முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை முதலே தொடங்கியது.
இந்நிலையில், 150 வார்டுகளுக்கான ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி,தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 55 இடங்களையும், பாஜக 48 இடங்களையும், எஐஎம்ஐஎம் 44 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றியது. இதன் மூலம் எந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடந்த முறை தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெறும் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை 48 இடங்களை கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இது அந்த கட்சிக்கு தெலங்கானா மாநிலத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி – எஐஎம்ஐஎம் இரண்டும் சேர்ந்து கூட்டணி அமைத்து கார்பரேஷன் நிர்வாகத்தை கையகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மீது நம்பிக்கை வைத்துள்ள தெலங்கானா மக்களுக்கு மிக்க நன்றி. பாஜகவின் ‘வளர்ச்சிக்கான அரசியலை'முன்னெடுத்துச் சென்று ஹைதராபாத் கார்பரேஷன் தேர்தலில் நல்ல செயல்திறனை நிரூபித்த பாஜக தேசீய தலைவர் திரு.நட்டா மற்றும் தெலங்கானா மாநில தலைவர் திரு. சஞ்சய் பாண்டி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் பாஜக தெலங்கானா பிரிவின் நம் காரியக்கார்தாக்களின் கடின உழைப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்". என்று கூறியுள்ளார்.
