Kathir News
Begin typing your search above and press return to search.

கருப்பு பூஞ்சைக்கு சிச்சை அளிக்க மாநிலங்களுக்கு கூடுதலான மருந்துகள்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா.!

இதுவரை நாடு முழுவதும் மருந்து குப்பிகள் சுமார் 7.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது எனக்கூறியுள்ளார்.

கருப்பு பூஞ்சைக்கு சிச்சை அளிக்க மாநிலங்களுக்கு கூடுதலான மருந்துகள்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 Jun 2021 9:18 AM IST

கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையில் கருப்பு பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதற்கான சிகிச்சையில் ஆம்போடெரிசின்பி மருந்து அளிக்கப்படுகிறது. இந்த மருந்து நல்ல பலன்களை அளிப்பதாக மருத்துவர்கள் கூறினார். நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை அதிகரிக்க தொடங்கியதால் அதற்கான மருந்து தேவையும் அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில், மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரத்து 120 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் மருந்து குப்பிகள் சுமார் 7.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது எனக்கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News