பயணங்களை தடை செய்வதால் ஓமிக்ரான் வைரஸை தடுக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து ஓமிக்ரான் என்ற புதிய வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இதன் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு பயணத்தடைகளை பல்வேறு நாடுகள் விதித்து வருகிறது. இது போன்ற செயல்களினால் மட்டும் ஓமிக்ரான் பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
By : Thangavelu

இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற புதிய வகையிலான வைரஸ் தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலான வைரஸ் தொற்று மனிதர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இவை தென்னாப்பிரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்டு பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி விட்டது. இதனால் அந்நாடுகள் மீண்டும் அச்சமடைந்துள்ளது. இதனால் இந்த நாடுகள் அனைத்தும் வெளிநாட்டு பயணம் மற்றும் உள்நாட்டுக்கு வருகின்ற பயணங்களை தடை செய்து வருகிறது. இதனால் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாடுகளுக்கு வியாபார ரீதியில் பயணம் மேற்கொள்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், பயணத் தடையை விதித்தால் மட்டும் ஓமிக்ரான் வைரஸ் தொற்றை தடுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. பயணம் என்பது மனிதனின் இயல்பு வாழ்க்கையில் ஓர் அங்கம் ஆகும். எனவே பயணத்தடையால் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் இழப்பு மட்டுமே ஏற்படும். இது போன்ற நோய்களை கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai