டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு.. 4 கார்கள் சேதம்.!
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு.. 4 கார்கள் சேதம்.!

டெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரம் அருகாமையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் ஒரு பக்கம் போராட்டம் செய்து வரும் வேளையில், இன்று இஸ்ரேல் தூதரம் அருகாமையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 கார்கள் சேதமடைந்துள்ளதாக போலீசார் முதற்கட்டமாக தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு குறைந்த சக்க வாய்ந்தது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே டெல்லியில் காலிஸ்தான் பிரினை வாதிகள் நுழைந்துள்ளனர். இவர்களின் சதிவேலையாக இருக்கும் என்ற கோணத்தில் டெல்லி போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் தூதரகம் அருகாமையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.