இந்திய அரசர்களைப் பற்றி பாடப்புத்தகங்களில் யாரும் எழுதவில்லையே ஏன்? - அக்ஷய் குமார் வேதனை!
By : Thangavelu
அண்மையில் நடத்தப்பட்ட ஒரு நேர்கானல் ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், படையெடுப்பாளர்களைப் பற்றிப் பாடப்புத்தகங்களில் ஏராளமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நம்முடைய நாட்டின் அரசர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது சாம்ராட் பிருத்விராஜ் என்ற திரைப்படம். இப்படம் சாம்ராட் பிருத்விராஜ் சௌகான் என்ற இந்திய மன்னரின் வாழ்க்கைக் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் பேசிய, நடிகர் அக்ஷய் குமார், இந்திய அரசர்களைப் பற்றி யாருமே வரலாற்றுப் புத்தகங்களில் எழுதவில்லை எனவும், நமது வரலாற்றுப் புத்தகங்களில் அவர்களைப் பற்றி எழுத வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக கல்வி அமைச்சர்கள் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கிறேன் என்றார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், துரதிர்ஷ்டவசமாக நமது வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் சாம்ராட் பிருத்விராஜ் சௌகானைப் பற்றி வெறும் 23 வரிகள் மட்டுமே உள்ளது. ஆனால் படையெடுத்தவர்களை பற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளது. நமது கலாசாரம் மற்றும் நமது மகாராஜாக்கள் பற்றி எதுவும் எழுதவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. மேலும், முகலாயர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நமது இந்திய மன்னர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan