Kathir News
Begin typing your search above and press return to search.

ஜனவரி முதல் பூஸ்டர் டோஸ் ! சிறுவர்களை பாதுகாக்க 3ம் தேதி முதல் தடுப்பூசி: பிரதமர் மோடி தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றை அழிப்பதற்காக தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக உள்ளது. இதனால் இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தற்போது வரை தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஜனவரி முதல் பூஸ்டர் டோஸ் ! சிறுவர்களை பாதுகாக்க 3ம் தேதி முதல் தடுப்பூசி: பிரதமர் மோடி தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  26 Dec 2021 3:30 AM GMT

கொரோனா வைரஸ் தொற்றை அழிப்பதற்காக தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக உள்ளது. இதனால் இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தற்போது வரை தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 9.45 மணியளவில் (டிசம்பர் 25) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது: ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றை பார்த்து யாரும் பீதியடைய வேண்டாம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் என்றார். தற்போது நமது நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது. பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில், பல நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே நாமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


மேலும், அனைவரும் வெளியில் செல்லும்போது முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு தேய்த்து கழுவுவது சிறந்தது. இதனை கட்டாயம் கடைப்பிடித்து வந்தால் தொற்று நம்மை அண்டாது. தற்போதைய சூழலில் நாடு முழுவதும் 18 லட்சம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளது. ஒமைக்ரான் தொற்றை நினைத்து பீதியடைய தேவையில்லை. அந்த தொற்றை எதிர்த்து போராட அனைத்து உள்கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் தடுப்பூசி போடும் பணியானது இந்தியாவில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது. தற்போது வரை 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் 100 சதவீத தடுப்பூசி எட்டிவிட்டது.

உலகிலேயே முதன் முறையாக டி.என்.ஏ. தடுப்பூசி பயன்படுத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனை மூக்கு வழியாக செலுத்துகின்ற சொட்டு மருந்து ஆகும். விஞ்ஞானிகள் சிறந்த முறையில் உருவாக்கியுள்ளனர். வருகின்ற ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் தொற்று பரவலை தடுக்கின்ற வகையில் 15 முதல் 18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. அதே போன்று ஜனவரி 10ம் தேதி பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. முன்களப்பணியாளர்கள் மட்டும் இணை நோய் உள்ளவர்களுக்கு முதலில் போடப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News