உத்தரகண்ட்: இயற்கை சீற்றத்தினால் மிகப்பெரிய நிலச்சரிவு !
இயற்கை சீற்றத்தினால் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை பேரிடர் படையினர் மீட்டுள்ளது.
By : Bharathi Latha
இந்தியாவில் இயற்கை மாற்றங்கள் ஏற்படுகையில் அது மிகப்பெரிய உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், சாமோலி மாவட்டத்தின் ரெய்னி கிராமத்திற்கு அருகில் உள்ள தாமஸ் பகுதியில் நேற்று திடீரென அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதில் பல நபர்கள் சிக்கிக்கொண்டார்கள்.
உடனே இதுபற்றி தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்பு படை சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை மீட்டு வெளியேற்றி உள்ளது. அதேபோல் உத்தரகாண்டில் தனக்பூர்-சம்பவாத் தேசிய நெடுஞ்சாலை சம்பவாத்தில் சுவாலா அருகே ஏற்பாட்டை நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலை முற்றிலும் மூடப்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர். எனது இந்த பகுதியில் ஏற்பட்ட இதுதான் மிகவும் அதி பயங்கரமான நில சரிவாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து மாநில பேரிடர் மேலாண்மை படை சம்பவ பகுதிக்கு சென்றது. அந்த குழு, நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை மீட்டு வெளியேற்றி உள்ளது. மேலும் இந்த நிலச்சரிவை அகற்ற குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் போக்குவரத்தை வேறு வழியில் திருப்பிவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்துகிறது.
Image courtesy: India Today