"எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" - இந்தியா திரும்பிய ஆப்கான் பெண் உருக்கம் !
Breaking News.

By : Pradeep Gunasekaran
ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இன்று காலை காபூல் விமான நிலையத்தில் தவித்த 107 இந்தியர்களை விமானப்படை விமானம் மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. அப்போது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சில பேர் உள்பட மேலும் 61 பேர் இந்தியா வந்தனர்.
அவர்கள் இன்று காலை 10.15 மணியளவில் காசியாபாத்தில் தரையிறங்கினர். அவர்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், ''ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஆகவே, நான் எனது மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இங்கே வந்தேன். எங்கள் இந்திய சகோதரர்கள், சகோதரிகள் எங்களை மீட்க அங்கு வந்தனர். தலிபான்கள் எனது வீட்டை தீ வைத்து கொளுத்திவிட்டனர். எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
