கேரளாவை கட்டுக்குள் கொண்டு வருகிறதா கொரோனா வைரஸ்?
கேரளாவை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
By : Bharathi Latha
இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது இரண்டாம் அலை பாதிப்புகள் மெல்ல மெல்ல குறைந்து. நிபுணர்களின் கருத்துப்படி மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் கேரளாவில் மட்டும் தொடர்ந்து பாதிப்புகளை எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கேரளாவில் அண்மைகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு 3-வது நாளாக இன்றும் கொரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து உள்ளது.
அங்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் தான் தற்பொழுது நோய் தொற்று பரவுவதற்கு அதிகமான காரணங்கள் ஒன்றாக இருந்தது என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக கேரளவில் இன்று ஒரே நாளில் 32,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 1,70,703 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32,801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவால் 179 பேர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழப்பு தற்பொழுது அங்கு அதிகரித்து வருகின்றது.
இந்நிலைக்கு தொற்று காரணமாக தற்போது வரை சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,95,254 ஆக அதிகரித்துள்ளது. என்னதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் செல்லும் பொழுது தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Image courtesy:times of India