Kathir News
Begin typing your search above and press return to search.

டோக்கியோ: இந்தியாவிற்கான வெள்ளி பதக்கம் - குவியும் பாராட்டுக்கள் !

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோ: இந்தியாவிற்கான வெள்ளி பதக்கம் - குவியும் பாராட்டுக்கள் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Aug 2021 1:51 PM GMT

தற்போது ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்று தற்போது சாதனை படைத்துள்ளார். இந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் C4 பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.


இந்திய வீராங்கனையான பவினாபென் படேல், ஜாங் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவினாபென் பட்டேல், சீனாவின் ஜோவ் யிங்குடன் மோதினார். பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.


மேலும் இந்த வெற்றி குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறுகையில், "பவினா படேல் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய அணி மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துள்ளார். அவரின் அசாதாரண உறுதியும் திறமையும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அசாதாரண சாதனைக்கு என் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பவினா பட்டேல் தனிச்சிறப்புக்குரிய வரலாற்றை படைத்துள்ளார். பவினா பட்டேல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்கு கொண்டு வர உள்ளார். அதற்காக எனது வாழ்த்துக்கள். பவினாவின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்" என்று கூறியுள்ளார்.

Input:https://m.timesofindia.com/sports/tokyo-paralympics/tokyo-paralympics-bhavina-patel-has-made-us-proud-we-will-give-a-grand-welcome-says-her-father/amp_articleshow/85731236.cms

Image courtesy:times of India


Next Story
கதிர் தொகுப்பு
Trending News