Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி !

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வழங்குவதற்கான ஆய்வு தொடர் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Aug 2021 7:12 PM IST

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இறுதிகட்ட பணியில் உள்ள நிலையில், தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தங்களுடைய தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்கான ஆய்வில் அனுமதிக்குமாறு விண்ணப்பத்தை அளித்துள்ளது. இந்தியாவில் தாங்கள் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இன்று மீண்டும் விண்ணப்பித்து உள்ளது.


மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், "Johnson covid19" என்னும் தடுப்பூசியை 12-17 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சிலருக்கு ரத்த உறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டன. இதனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


இந்நிலையில், கடந்த மாதம் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் இதுபற்றி கூறுகையில், "தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இழப்பீடு உட்பட சட்ட சிக்கல்கள் குறித்து பேச குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்களுடன் இக்குழு ஆலோசனை மேற்கொள்ளும்" என்றார். இதையடுத்து தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி திரும்பப் பெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆய்வில் தனது நிறுவனம் சார்பில் அனுமதிக்க வேண்டிய விண்ணப்பத்தை தற்பொழுது முன்வைத்து உள்ளது.

Input:https://www.indiatoday.in/coronavirus-outbreak/story/johnson-and-johnson-seeks-nod-for-vaccine-trials-on-children-1843049-2021-08-20

Image courtesy:India Today


Next Story
கதிர் தொகுப்பு
Trending News