Kathir News
Begin typing your search above and press return to search.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் ? WHO கோரிக்கை !

உலகம் தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் கொரோனாக்கு எதிராக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் ?  WHO கோரிக்கை !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Aug 2021 1:20 PM GMT

இந்தியாவில் தற்பொழுது பாதிப்புகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். மேலும், 3வது அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் சமீபத்தில் செய்தியாளர்கள் குழுவிடம் அவர் பேசியுள்ளார்.


அப்போது அவர் கூறுகையில், "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில், சிறுவர்களிடையே தொற்று பரவமால் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, உலகம் தற்பொழுது இயல்பு நிலைமைக்கு திரும்பி வருவதற்கு தடுப்பூசி மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது.


மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி ஒப்புதல் வழங்கியது தொடா்பான கூடுதல் தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பின் நிபுணா்கள் குழு கோரியுள்ளது. அதன் காரணமாகவே அத்தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாத மத்திக்குள் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Input:https://www.aljazeera.com/news/2021/8/24/india-approves-further-trials-for-homegrown-mrna-covid-19-shot/WHO / corona vaccine

Image courtesy:wikipedia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News