Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.!

இன்று பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.!

இன்று பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2021 8:15 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தோம். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும், தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொழில்துறையும் பழைய மாதிரி வேகம் எடுத்துள்ளது.

இந்த நேரத்தில் 2021 22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் 11 மணியளவில் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் குறித்து அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொழில்துறைக்கு சலுகைகள் கிடைக்குமா, பொதுமக்களுக்கு என்ன மாதிரியான பட்ஜெட்டா இருக்கும் என்பன கேள்வியாக எழுந்துள்ளது.

மேலும், இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த உடனே அனைவருக்குமே இணையத்தின் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அனைத்து பாமர மக்களும் பட்ஜெட்டை இணையவாயிலாக தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News