பத்தாம் வகுப்பு முடித்தவுடனே CA படிப்பிற்குப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை.!
பத்தாம் வகுப்பு முடித்தவுடனே CA படிப்பிற்குப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை.!

By : Kathir Webdesk
இன்ஸ்டிடூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா(ICAI) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, CA படிப்பிற்கான அடிப்படை தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உடனே பதிவு செய்யலாம். இதன் மூலம் CA படிக்கவிரும்பும் மாணவர்களுக்கு ஆறு மாத கால இடைவெளியைக் குறைக்க முடிகின்றது.
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அனுமதியளித்தாலும், அந்த மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னரே சேர்க்கை முறைப்படுத்தப் படுகின்றது. முன்னர் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வினை முடித்த பிறகே CA படிப்பிற்காகப் பதிவு செய்யமுடியும். பிறகு நான்கு மாத கால இடைவெளிக்குப் பின்னரே அவர்கள் அடிப்படை தேர்வினை எழுத முடியும். இந்த புதிய திட்டம் மூலம், பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தொடரும் முன்னரே இந்த படிப்பு காலம் முடிவடைகின்றது.
எனவே இதன் மூலம் பிப்ரவரி/மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் தேர்வினை முடிக்கும் மாணவர்கள் மே மாதத்தில் நடைபெறும் CA அடிப்படை தேர்வில் பங்குபெற முடியும். அவர்கள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்வுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்று ICAI தெரிவித்துள்ளது. இந்த புதிய வழிமுறை மூலம் ஆரம்பக்காலத்திலே சேர்க்கை பெறுவதால் மாணவர்கள் விரைவில் CA ஆக முடிகின்றது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இதன் மூலம் அவர்கள் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே அடிப்படை தேர்விற்காக அவர்கள் தயார் செய்ய முடிகின்றது," என்று ICAI தலைவர் அதுல் குமார் குப்தா கூறியுள்ளார். மேலும், "அது அவர்களின் அறிவை புதுப்பித்து CA தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான நேரமும் இருக்கின்றது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
CA படிப்பிற்கான அடிப்படை தேர்வு ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறுகின்றது. மே/ஜூன் மாதத்தில் ஒன்றும் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் ஒன்று,நடைபெறும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மொத்தம் நான்கு தாள்களைக் கொண்டிருக்கும். இரண்டு அகநிலையாகவும் மற்றும் மற்ற இரண்டு புறநிலையாகவும் இருக்கின்றது. இந்த முயற்சியானது இளைஞர்களிடம் இருந்து பொறியியல் படிப்பினை போன்று CA விழும் சமூகத்தில் உறுதியான அர்ப்பணிப்பைப் பெற முடிகின்றது.
