Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டின் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பிரதமரின் திட்டம் !

Cabinet approval sets the implementation of PM Gati Shakti National Master Plan (NMP) in motion

நாட்டின் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பிரதமரின் திட்டம் !

MuruganandhamBy : Muruganandham

  |  22 Oct 2021 3:00 AM GMT

பிரதமரின் காதிசக்தி தேசியப் பெருந்திட்டத்திற்கான, அமைப்பு ரீதியான நடைமுறைகளை வெளியிட்டு, அதனை செயல்படுத்தவும் கண்கானிக்கவும் பன்முக இணைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கான நடைமுறைகளுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட அம்சங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பன்முனைப் போக்குவரத்து இணைப்பு வசதிக்கான பிரதமரின் காதி சக்தி தேசிய பெருந்திட்டம் பிரதமரால் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த, அதிகாரமளிக்கப்பட்டச் செயலாளர்கள் குழு, வலையமைப்பு திட்டமிடல் குழு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பிரிவு போன்றவை தேவையானத் தொழில்நுட்பப் போட்டித்தன்மையுடன் உருவாக்கப்படும்.

மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்டச் செயலாளர்கள் குழு, 18 அமைச்சகங்களின் செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பதுடன் சரக்குப் போக்குவரத்துப் பிரிவின் தலைவர் இதன் உறுப்பினர் மற்றும் அமைப்பாளராக செயல்படுவார்.

அதிகாரமளிக்கப்பட்டச் செயலாளர்கள் குழு, பிரதமரின் விரைவுச்சக்தி தேசிய பெருந்திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து கண்காணிப்பதுடன் மேம்பட்ட சரக்குப் போக்குவரத்தையும் உறுதி செய்யும். தேசிய பெருந்திட்டத்தில் பின்னாளில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை வகுக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் காதி சக்தி தேசிய பெருந்திட்டம் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்த்து, ஒட்டுமொத்த மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடலை மேம்படுத்தி, திட்டப்பணிகளின் செயலாக்கத்தை விரைவுபடுத்துவதுடன் பல்வகைப் போக்குவரத்து மற்றும் தொலைதூரப் பகுதிகளை இணைக்கும் திட்டங்களும் மேற்கொள்ளும். இது சரக்குப்போக்குவரத்துச் செலவை பெருமளவுக் குறைக்க உதவும். நுகர்வோர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வணிகத்துறையினருக்கு பெருமளவிலான பொருளாதார ஆதாயத்தையும் அளிக்கும்.

இந்த அனுமதி மூலம் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவது விரைவுபடுத்தப்படுவதுடன், நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல் கட்டமைப்பையும் உருவாக்கும்.

இந்த அனுமதி மூலம் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து, பல்வகை சரக்குப் போக்குவரத்தையும் ஒருங்கிணைக்க உதவும். பல்வகை இணைப்பிற்கான இத்திட்டம், இந்திய மக்கள், இந்திய தொழிற்சாலைகள், இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய விவசாயிகளுக்கான மத்திய அரசின் முழுமையான ஆளுகையை உறுதி செய்யும்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News