Kathir News
Begin typing your search above and press return to search.

கம்யூனிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை இணைப்புத் திட்டம் - துணிச்சலான முடிவை அறிவித்த பிரதமர்!

Cabinet approves continuation of Pradhan Mantri Gram Sadak Yojana

கம்யூனிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை இணைப்புத் திட்டம் - துணிச்சலான முடிவை அறிவித்த பிரதமர்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  18 Nov 2021 9:04 AM IST

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை இணைப்புத் திட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)-I,PMGSY-IIதிட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள சாலை மற்றும் பாலப்பணிகளை முடிப்பதற்காக, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித் துறையின் கருத்துருவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை இணைப்புத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 1, சமவெளியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்டப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்களில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் சாலை வசதி அமைக்க வகை செய்கிறது. மொத்தம் 1,84,444 குடியிருப்புகளில் 2,432 குடியிருப்புகளுக்கு மட்டும் பணி எஞ்சியுள்ளது. 6,45,627 கிலோ மீட்டர் நீள சாலையில், 20,950 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மற்றும் 7,523 பாலங்களில் 1,974 பாலங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2-ல் 50,000 கிலோ மீட்டர் ஊரகச் சாலைக் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. மொத்தம் 49,885 கிலோ மீட்டர் நீள சாலையில் 4,240 கிலோ மீட்டர் தூரத்திற்கும் 765 பாலங்களில் 254 பாலங்களும் முடிக்கப்படாமல் உள்ளன. கொரோனா பரவல், ஊரடங்கு, மழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்தப் பணிகள் தாமதமடைந்தன. இந்த ஒப்புதலுக்கு பின்னர் இவை விரைவில் முடிக்கப்படும்.

ஊரடங்கு, மழை, குளிர்காலம், வனப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் PMGSY-I மற்றும் II இன் கீழ் நிலுவையில் உள்ள பெரும்பாலான பணிகள் கிடப்பில் உள்ளன. நிலுவை பணிகளை முடிக்க மாநிலங்களுக்கு உதவும் வகையில் செப்டம்பர் 2022 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சாலை இணைப்புத் திட்டம் (RCPLWEA) 9 மாநிலங்களில் 44 பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இணைப்பை மேம்படுத்த 2016 இல் தொடங்கப்பட்டது. 5,714 கி.மீ சாலை நீளத்தில் 358 பாலப் பணிகள் முடிவடைய நிலுவையில் உள்ளன, மேலும் 1,887 கிமீ சாலை நீளம் மற்றும் 40 பாலங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான இந்தத் திட்டங்களை முடிப்பதற்காக இந்தத் திட்டம் மார்ச், 2023 வரை நீட்டிக்கப்படுகிறது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News