Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி நிதி ஒதுக்கீடு - ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அசத்தல்!

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி நிதி ஒதுக்கீடு - ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அசத்தல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Nov 2022 1:13 AM GMT

ஒரே நாடு ஒரே உரம் திட்டம்

ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளை அறிமுகப்படுத்தி இருந்தார்.

மத்திய அரசு ஒப்புதல்

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்ஃபர் போன்ற ஊட்டச்சத்துகளை கிலோ கிராமுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறையின் பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்கப்பட உள்ளது. அதன்படி நைட்ரஜனுக்கு ரூ.98.02, பாஸ்பரசுக்கு ரூ.66.93, பொட்டாஷூக்கு ரூ.23.65,சல்ஃபருக்கு ரூ.6.12 மானியமாக வழங்கப்படும்.

Input From: PMindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News