மத்திய அரசு வழங்கிய சர்ப்ரைஸ் கிப்ட்: யாருக்கு தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
By : Bharathi Latha
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை ஜனவரி 2023 முதல் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த ஒரு அறிவிப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியான தகவல்களை பெற்று இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் சிலிண்டர் காக வழங்கப்படும் 200 மானியம் மேலும் ஒரு ஆண்டிற்கு நீடிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோல் பொருட்களில் விலை அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அனுராக் தாகூர் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை 01.01.2023 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் தவணையானது விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 38% ஐ விட 4% அதிகமாகும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தில் ஏற்படும் கூட்டுப் பாதிப்பு ஆண்டுக்கு ரூ.12,815.60 கோடியாக இருக்கும். இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News