வெளிநாட்டு நிதி பெற்றுக் கொண்டு விவசாய சட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் - FCRA விதி மீறல்.!
வெளிநாட்டு நிதி பெற்றுக் கொண்டு விவசாய சட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் - FCRA விதி மீறல்.!

By : Yendhizhai Krishnan
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் குறிப்பிட்ட மதம் சார்ந்த அமைப்புகள் மத்திய அரசின் சட்ட திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் தூண்டுவதும் தெரிந்த விஷயமே. தற்போது விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத அமைப்புகள் செயல்படத் தொடங்கி இருக்கின்றன.
வேலூரில் செயல்படும் தொன்போஸ்கோ அனாதைகள் இல்லத்தில் "விவசாயப் பெருமக்களே நாங்கள் உங்களோடு" என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Don Bosco Orphanage என்ற பெயரில் இயங்கும் இல்லம் தமிழில் தொன்போஸ்கோ மாணவர் இல்லம் என்று பேனரில் பெயரிட்டுள்ளது. அது மாணவர் இல்லம் என்றால் Orphanage என்று பெயரிட்டது ஏன் என்று ஒரு பக்கம் சந்தேகம் எழுகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் அல்ல மதத்திற்கும் மத்திய, மாநில அரசிற்கு எதிரான போராட்டம் என்பதை நிரூபித்த வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் உள்ள டான் போஸ்கொ பள்ளியின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள பதாகை இது. pic.twitter.com/N5BKkkOUdD
— PARANTHAMAN.SRIDARAN 🇮🇳 பரந்தாமன்.ஸ்ரீதரன் (@sparjaga) December 13, 2020
அண்மையில் நாடு முழுவதும் உள்ள பல அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளில் பலர் உண்மையில் அனாதைகளே இல்லை என்றும், தாய் தந்தை இருக்கும் குழந்தைகளை வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக அனாதைகள் என்று காட்டி சிறார் நீதிச் சட்டத்துக்கு மாறாக தங்க வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இத்தகைய இல்லங்களில் குழந்தைகள் குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின குழந்தைகளை பைப்பிள் வாசித்து ஜெபம் செய்யச் சொன்ன இல்லம் மீது நடவடிக்கை எடுக்காத மாஜிஸ்திரேட்டை நீக்குமாறு தேசிய குழந்தைகள் ஆணையம் ம.பி அரசுக்கு கடிதம் எழுதிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பெற்றோர் இருக்கும் குழந்தைகள் அவர்களது குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் இணைந்து வாழ தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு தொன்போஸ்கோ அனாதை இல்லம் போன்ற பல இல்லங்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Don Bosco Orphanage Society-Vellore is FCRA-NGO, TN/75980084.
— UniversalReligiousFreeDoom (@by2kaafi) December 15, 2020
Remember: TN (at least until recently) had the largest number of Orfanajes in Desh & largest number of inmates.
Reason isn't difficult to fathom. https://t.co/hGmH8RRFgQ pic.twitter.com/JuyfHjsIMF
வேலூர், காந்திநகரில் தொன் போஸ்கோ தேவாலயம் மற்றும் மேல்நிலைப் பள்ளியுடன் அமைந்துள்ள இந்த இல்லம் 1950ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. வேலூர் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் சலேசியர்களால் நிர்வகிக்கப்படும் The Katpadi Orphanage Society என்ற இந்த அமைப்பு நடத்தும் பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனாதை/ஏழைக் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இதற்காக ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் 'அனாதைகளுக்கு' என்று குறிப்பிட்டு நன்கொடை பெற்று வருகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 'அநாதைகளுக்கு' என்று ₹39 லட்சம் ரூபாய் நிதி பெற்றுள்ளனர். இவ்வாறு FCRA உரிமம் பெற்று வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புக்கள் அரசின் திட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானது. இந்நிலையில் இந்த அமைப்பின் பள்ளி வளாகம் காவலர் தேர்வுக்கான மையமாக வேறு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு The Katpadi Orphanage Society அமைப்பு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
References
https://www.ucanews.com/directory/social-welfare/india-vellore/141/20
