Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா? மத்திய அரசு விளக்கம்.!

கொரோனா தடுப்பூசியால்தான் மலட்டுதன்மை ஏற்படுகின்ற என்ற கட்டுக்கதையை மறுக்கிற விதத்தில் மத்திய அரசு தெளியாக விளக்கத்தை அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா? மத்திய அரசு விளக்கம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 July 2021 9:58 AM IST

கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் வேகமெடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர். அது போன்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வருமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போடலாமா என்ற கேள்வியும் எழுகிறது.





இந்நிலையில், இதனை மறுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில் ஏற்படுகின்ற கேள்விகளுக்கான பதில்களை விளக்கமாக அளித்து வருகிறது. தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற எந்த ஒரு தடுப்பூசியும் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தாது எனு கூறப்பட்டுள்ளது.





மேலும், கொரோனா தடுப்பூசியால்தான் மலட்டுதன்மை ஏற்படுகின்ற என்ற கட்டுக்கதையை மறுக்கிற விதத்தில் மத்திய அரசு தெளியாக விளக்கத்தை அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என கூறியுள்ளது.

எனவே அனைவரும் பயமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News