Kathir News
Begin typing your search above and press return to search.

எச்சரிக்கையை மீறி கனடா பிரதமர் மறுபடியும் கொக்கரிப்பு: இந்தியா மீண்டும் பொளேர் அடி.!

எச்சரிக்கையை மீறி கனடா பிரதமர் மறுபடியும் கொக்கரிப்பு: இந்தியா மீண்டும் பொளேர் அடி.!

எச்சரிக்கையை மீறி கனடா பிரதமர் மறுபடியும் கொக்கரிப்பு: இந்தியா மீண்டும் பொளேர் அடி.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  6 Dec 2020 7:38 PM IST

மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடான கனடாவில் அந்த நாட்டின் சொந்த மக்கள் தொகை மிகவும் குறைவு. அந்நாட்டின் நிலப்பரப்புககேற்ற அதன் வளர்ச்சிக்காக அதிக அளவு மனித வளத்தை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் மூலம் அந்நாடு அதிக அளவில் பெற்று வருகிறது.

அதன்படி இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் கனடா சென்று பலவேறு தொழில்கள் செய்து வ்ருவதுடன், அங்கு அரசியல் உட்பட அவர்கள் இல்லாத துறையே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்துள்ளனர். அதேபோல ஏராளமான இலங்கைத் தமிழர்கள் மற்றும் நம் தமிழக தமிழர்களும் அங்கு குடியேறி பல துறைகளில் கால் பதித்துள்ளனர்.

இந்த நிலையில் கனடா நாட்டு பொருளாதரத்துக்கு உதவி வரும் அவர்களை தங்களது நாட்டிலேயே நிலை நிறுத்திக் கொள்ளும் வகையிலும்,அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும், கனடா அரசு குறுக்கு வழியில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழர் விஷயங்களில் அவ்வாறு நடந்து வருகிறது. இதனால் குளிர்ச்சியடைந்த நம் தமிழர்களில் சிலர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு பூர்வீக தமிழர் என்றும், அவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி என்றும் அடிப்படையில்லாத தகவல்களை கூறினர்.

மேலும் ட்ரூடோவின் பேச்சு தமிழர்களுக்கு ஆதரவாக மிகவும் கவர்ச்சியாக இருந்தது. இது உண்மையான சில தழர்களுக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தமிழ் சமுதாயத்தின் மீது ஏற்கனவே பல அந்நிய சக்திகள் மதம் மாற்றும் நோக்கத்தில் குறியாக உள்ள நிலையில் அதற்கேற்ப ட்ரூடோ பேசுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்களை பல காரணங்கள் கூறி, அதிக அளவில் பஞ்சாப் மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சீக்கிய விவசாயிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கனடாவில் உள்ள சீக்கிய தலைவர்களில் சிலரும் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கனடா பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் விவசாயிகளின் எதிர்ப்புக்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

கனடாவின் இந்திய வம்சாவளி பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜனும் இந்தியாவில் விவசாயிகள் எதிர்ப்பு குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்திருந்த நிலையில், தற்போது வலுவான எதிர்ப்பை, இந்தியாவுக்கான கனடா தூதர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

நேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடாவின் தூதரை வரவழைத்து, "கனடா பிரதமரின் இந்த கருத்துக்கள் இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத குறுக்கீடு என்று கூறியதுடன் சில கனடா நாட்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

இது எங்கள் உள் விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடு என்றும் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்றும் தூதரிடம் கடுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா தலைவர்களின் கருத்துக்கள் இந்திய தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள துணைத் தூதரகங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியுள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனடா உலகின் எந்த இடத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றாலும் அதனை ஆதரிக்கும். நாங்கள் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபடுவதை நாங்கள் விரும்புகின்றோம், இந்தியா கண்டித்தாலும் விவசாயிகளுக்கான ஆதரவை திரும்ப பெற முடியாது என்ற தொனியில் ஒட்டாவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீண்டும் பேசியுள்ளார் கனடா நாட்டு பிரதமர்.

இதனால் மேலும் அதிருப்தியடைந்த இந்தியா, கனடாவில் நடக்க உள்ள கொரோனா குறித்த வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என இந்தியா தெரிவித்து அம்மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ளது.

அடுத்த வாரம் நடக்கும் இந்த மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க மாட்டார் என கனடாவிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக டெல்லியில் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகுதான் கனடாவின் நடவடிக்கைகள் இப்படி மாறியுள்ளது, அதுவும் கனடாவுக்கு பிரதமராக தீவிர கிறிஸ்தவ மதப்பற்று மற்றும் மதமாற்ற வெறி கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ பதவி ஏற்றதும்தான் இந்தியாவுடன் இப்படி முரண்பட்ட போக்கை கையாள்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News