Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவுக்காக தன்மக்கள் நலனையும் மறந்த கனடா பிரதமர் ட்ரூடோ: இரகசிய கடிதம் அம்பலமானதால் மக்கள் குமுறல் !

சீனாவுக்காக தன்மக்கள் நலனையும் மறந்த கனடா பிரதமர் ட்ரூடோ: இரகசிய கடிதம் அம்பலமானதால் மக்கள் குமுறல் !

சீனாவுக்காக தன்மக்கள் நலனையும் மறந்த கனடா பிரதமர் ட்ரூடோ: இரகசிய கடிதம் அம்பலமானதால் மக்கள் குமுறல் !

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  13 Dec 2020 4:21 PM GMT

கனடா பிரதமர் ட்ரூடோவின் சமீபத்திய பல பன்னாட்டு கொள்கைகள் ஆபத்தானவையாக உள்ளன, குறிப்பாக சமீபத்தில் வெளியான ஒரு ரகசிய ஆவணம் மூலம் சீனாவுடனான அவரின் உறவுகள், அவர்களின் ஆபத்தான கொள்கைகள் பற்றிய இரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணம் ஓன்று வெளிப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தில் அமெரிக்க எதிர்ப்பை மீறியும், சொந்த நாட்டு படை தலைவர்களின் எதிர்ப்பையும் மீறியும் , தங்கள் நாட்டு அப்பாவி பிரஜைகளை பிணைக் கைதிகளாக கடத்தி சீனா சிறையில் வைத்த பிறகும் ‘குளிர்-வானிலை போரில்’ பயிற்சி பெற கனடா சீன இராணுவத்தை எவ்வாறு அழைத்தது என்பதை இரகசிய ஆவணம் ஓன்று அம்பலபப்டுத்தியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது கனடாவில் மட்டுமல்லாமல் அகில உலக அளவிலும் ட்ரூடோவின் மீது கறைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 34 பக்க ரகசிய ஆவணம் ரெபெல் நியூஸ் நெட்வொர்க் என்கிற ஊடகத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது, இது கனடா மீதான உண்மைகளையும், சீனா மீதான அதன் ஆபத்தான கொள்கையையும் வெளிச்சம்போட்டு காண்பிக்கிறது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி கனடா சீனாவின் இராணுவத்தை குளிர் காலநிலை போர் பயிற்சிக்கு அழைத்ததாக அது வெளிப்படுத்துகிறது.

டொராண்டோவில் உள்ள கனேடியப் படைக் கல்லூரியில், மற்றும் கிங்ஸ்டனில் உள்ள பிற இராணுவ வசதிகளிலும், கனடா சீன ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வந்ததை அவர்கள் பெற்ற தகவல்கள் உறுதிப்படுத்தின. கனடியர்கள் இந்த நிறுவனங்களில் ‘குளிர் காலநிலை இராணுவ தந்திரங்களுக்கு’ பயிற்சி அளித்து வந்தனர்.

அப்போதுதான் கனடிய குடிமக்கள் மைக்கேல் ஸ்பேவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகியோரை அமெரிக்காவை பழி வாங்க எண்ணி சீன ராணுவம் பணய கைதிகளாக சென்ற ஆண்டு கடத்தியது. இதனால் கனடா இராணுவம் பயிற்சியை ரத்து செய்தது. இதனால் கனடிய ஆயுதப்படைகள்மீது சீனா கோபமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் சீனா 2 கனேடிய குடிமக்களைக் கடத்திச் சென்ற சில நாட்களிலும் இந்த பயிற்சி ட்ரூடோவின் முயற்சியால் மேலும் நடக்கவிருந்தது என்பதுதான் மிகவும் கடுமையாக பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமாக, ரகசிய ஆவணம் வெளிப்படுத்தியது என்னவென்றால், கனேடிய குடிமக்கள் சென இராணுவத்தால் கடத்தப்பட்ட பின்னர் கனேடிய இராணுவம் பயிற்சி அமர்வுகளை ரத்து செய்தபோது ட்ரூடோ சீன இராணுவம் உடனான வேறு எந்த தொடர்புகளையும் கனடா விமானப்படை ரத்து செய்யக்கூடாது என்று இராணுவத்திடம் கூறியுள்ளது.

ஏதாவது ரத்து செய்யப்பட வேண்டுமானால், முதலில் தன்னிடமிருந்து அனுமதியை ராணுவம் பெற்றிருக்க வேண்டும், பயிற்சி ரத்து செய்யப்பட்ட செய்தியை சீனாவுக்கு ‘மெதுவாக’ த்தான் தெரியப்படுத்தி இருக்க வேண்டும், இல்லை என்றால் சீனா கோபப்படும் என்று அவர் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

அந்த செய்தியின்படி, ட்ரூடோ சீனாவுக்கு எவ்வாறு அடிபணிந்திருக்கிறது என்பதைக் காண்பிப்பது மட்டுமல்லாமல், சீனாவுக்கு அடிபணிவது கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கையாகும் என்பதையும் இது “கனடாவின் சிவில் சேவையையும் ஆழமாக பாதித்துள்ளது” என்பதையும் காட்டுவதாக கூறப்படுகிறது.

தனது சொந்த நாட்டு விவகாரங்களில் கூட சரியாக செயல்படாத கனடிய பிரதமர் சீன நட்புக்காக எதையும் செய்வாரா என கனடிய ஊடகங்கள் மற்றும் எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் பற்றியும் அவர் இன்னொரு நாட்டின் உள் விவகாரம் என பார்க்காமல் தேவையற்ற முறையில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்தியா கண்டனம் தெரிவித்த பிறகும் அவர் திரும்பவும் பேசி வருவது அவர் இந்தியாவின் எதிரியான சீன அரசை திருப்திபடுத்தவா எனவும் இந்தியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் இப்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டங்கள் சீனாவால் தூண்டப்பட்டு நடத்தப்பட்டு வருவதாக இந்தியாவில் புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவின் ஆதரவாளராக இருக்கும் ட்ரூடோ இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைப்பது அவரும் சீனாவின் பின்னணியில் உள்ளாரா என்ற சந்தேகங்களை எழுப்புவதாக இந்தியாவில் சந்தேகப்படுகின்றனர்.

இந்நிலையில் உள்நாட்டிலும், வெளி நாட்டு விவகாரங்களிலும் ஆபத்தாக செயல்படும் ட்ரூடோவுக்கு எதிராக இப்போது கனடாவில் கண்டனங்கள் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய நடவடிக்கைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News