விசா விதிமுறைகளை மீறி விவசாய போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள கனடா அரசியல்வாதி!
விசா விதிமுறைகளை மீறி விவசாய போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள கனடா அரசியல்வாதி!
By : Saffron Mom
ஹரியானா மற்றும் டெல்லி இடையேயான எல்லையில் ஒரு மாதத்திற்கு மேலாக மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருவதில் கனடாவின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ராமந்தீப் ப்ரார் குண்டலி கிராமத்தில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதனை டிவிட்டர்க்கு எடுத்துச் சென்ற பராம்ப்டன் MP ராமந்தீப் ப்ரார் போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தொடர்ச்சியாகப் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் அங்குப் போராட்டம் நடத்தும் சிலரை எவ்வாறு சந்தித்தார் என்பதையும் பகிர்ந்து கொண்டார். அவரது டிவிட்டரில் இருப்பிடம் தற்போது போராட்டம் நடைபெறும் இடமான குண்டலி கிராமத்தைக் காண்பித்தது.
ஆச்சிரியம் அளிக்கும் விதமாக, பிரார் இவருக்கு தற்போது நடந்து வரும் போராட்டத்திற்கும் எவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த தற்போது விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். கனடா அரசியல்வாதி தற்போது இந்திய அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தனது செல்வாக்கைச் செலுத்தி வருகிறார்.