Begin typing your search above and press return to search.
குடியரசு தின வன்முறையைப் பெருமைப்படுத்திக் காட்டிய மலையாள செய்தி நிறுவனங்கள் மீது டெல்லி காவல்துறையிடம் புகார்.!
குடியரசு தின வன்முறையைப் பெருமைப்படுத்திக் காட்டிய மலையாள செய்தி நிறுவனங்கள் மீது டெல்லி காவல்துறையிடம் புகார்.!
By : Saffron Mom
ஜனவரி 26 இல் டெல்லியில் ஆர்பாட்டக்கார்கள் மற்றும் காலிஸ்தினிய ஆதரவாளர்கள் மத்திய அரசாங்கத்துக்கு எதிராக நடத்திய வன்முறையைப் பெருமைப்படுத்திக் காட்டியதற்காக மலையாள செய்தி சேனல்களான மனோரமா நியூஸ், மீடியா ஒன் மீது டெல்லி காவல்துறையின் கீழ் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி சேனல்கள் தேசத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, தவறான செய்தி கொண்டுவந்துள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனோரமா செய்தி அறிக்கையில், பாதுகாப்புத் துறையினரைத் தாக்கி செங்கோட்டையில் மதம் சார்ந்த கொடி ஏற்றப்பட்டு டெல்லி கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
#Kerala Complaint u/s 121, 121A, 124A,505,150,153, 153A,153B, 298 IPC filed with @DelhiPolice against Anusha Andrews, Sawad Muhammad of Malayalam @manoramaonline, Reporter News, Media One for glorifying violence by extremist groups to overthrow elected Government using terrorism pic.twitter.com/1HT7rKR0Y2
— Legal Rights Observatory- LRO (@LegalLro) February 18, 2021
அதன் பிறகு அந்த சேனல் செங்கோட்டையில் மதம்சார்ந்த கோடி ஏற்றப்பட்டதைப் பெருமைப்படுத்திக் கூறிவந்தது. அந்த செயல் ஒரு துணிச்சல் மிகுந்த செயலாகக் கூறியது. விவசாயிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இது சரியான பதிலடி என்றும் விமர்சித்தது. இது போக அந்த சேனல், ஒரு விவசாயி டெல்லி காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலி செய்தியைப் பரப்பத் தொடங்கியது.
"குற்றம் சாட்டப்பட்டுள்ள செய்தி சேனல், போராட்டத்தின் போது டிராக்டர் இயக்கிய ஒரு விவசாய தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பொய்யான செய்தியைக் கூறியது. மேலும் அது போன்று பரபரப்பு தருணங்களில் தெரிவிக்கப்படும் தவறான செய்திகள் வன்முறையைத் தூண்டக்கூடும் என்றும் கூறப்படும் செய்திகள் அனைத்தையும் மக்கள் உண்மை என்று கருதிக் கொள்வர்," என்று அந்த புகாரில் மேற்கோள்காட்டித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story