Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு.!

இந்த கூட்டத்தில் காணொளி வாயிலாக தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் புதியதாக அணை கட்டும் பிரச்சனை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  25 Jun 2021 5:03 PM IST

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் மத்திய நீர்வள ஆணையர் ஹல்தார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காணொளி வாயிலாக தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் புதியதாக அணை கட்டும் பிரச்சனை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், கர்நாடக மாநிலம், மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதி பெறப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா கூறிய கருத்திற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கு அணை கட்டினாலும் மற்ற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு மாதம்தோறும் தரவேண்டும் என கூறினர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுவதற்கு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News