ஆளுநர், எம்.பி பதவி வாங்கி தருகிறேன் என கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பல் - கொத்தாக தூக்கிய சி.பி.ஐ
ஆளுநர், எம்.பி பதவி வாங்கி தருவதாக 100 கோடியை ஏமாற்றிய நாலு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By : Mohan Raj
ஆளுநர், எம்.பி பதவி வாங்கி தருவதாக 100 கோடியை ஏமாற்றிய நாலு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுநர் பதவி, மாநிலங்களவை எம்.பி பதவி வாங்கி தருவதாக கூறி 100 கோடி மோசடி செய்த நாலு பேரை சி.பி.ஐ அதிரடியாக கைது செய்துள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ தரப்பில் கூறப்படுவதாக, 'மாநிலங்களவை எம்.பி, ஆளுநர் பதவி வாங்கி தருவதாக ஒரு கும்பல் பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்ததாக தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா லட்டுரைச் சேர்ந்த கமலாக்க ர் பிரேம்குமார் பன்கர், கர்நாடகா மாநிலம் பெல்கம்வைச் சேர்ந்த ரவீந்திரநாத் நாயக், டெல்லியை சேர்ந்த மகேந்திரா பால் அரோரா, அபிஷேக் போரா, முகமது அஜாஷ்கான் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரை எடுத்து சமீபத்தில் இவர்களின் வீடுகளில் ரைடு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டில் நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர், ஒருவர் சி.பி.ஐ அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிவிட்டார் இவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பிரேம்குமார் பன்கர் என்பவர் சி.பி.ஐ பிரிவில் மூத்த அதிகாரியாக இருந்தவர் இவர் தான் மூளையாக செயல்பட்டு பல்வேறு நபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் மேலும் உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் பழக்கம் இருப்பதால் ஆளுநர், எம்.பி பதவி வாங்கி தர முடியும் என ஏமாற்றியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தலைவராகவும் அரசு சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களில் இயக்குனராகவும் நியமிக்க பேரம் பேசி உள்ளார். இதற்காக ஏராளமான நபர்களிடமிருந்து 100 கோடி பெற்று மோசடி செய்துள்ளார், சி.பி.ஐ உயரதிகாரியாக இருப்பதை சுட்டிக்காட்டி மேலும் பல்வேறு நிலையங்களில் தனக்கு வேண்டியவர்களுக்கு சாதாரணமான காரியங்கள் செய்துள்ளார். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
