Kathir News
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் 56 இடங்களில் சி.பி.ஐ அதிரடி ரைடு - திகைக்க வைக்கும் பகீர் பின்னணி!

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை கண்டித்து நாடு முழுவதும் 56 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை.

நாடு முழுவதும் 56 இடங்களில் சி.பி.ஐ அதிரடி ரைடு - திகைக்க வைக்கும் பகீர் பின்னணி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Sept 2022 8:13 AM IST

குழந்தைகளின் ஆபாச படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் அவற்றை பல்வேறு நபர்களுக்கு அனுப்பி வைத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்காக முயற்சிகளை கையில் எடுத்துள்ளது அரசாங்கம். குற்றங்களில் ஈடுபடுபவருக்கு எதிரான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான இதழ் பாலியல் குற்றங்கள் தொடர்பாக சி.பி.ஐயின் சிறப்பு பிரிவு தீவிர விசாரணையிலும் நடத்தி வருகிறது.


இணையதளம் வழியாக மேற்படி குற்ற செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக மேகா சக்கரா என்ற பெயரில் சி.பி.ஐ நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. இதில் குழந்தைகளின் பாலியல் வன்முறை வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக இரண்டு மகளுக்குகள் குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட 56 இடங்களில் இந்த சோதனை நடந்தது.


மேகா சக்கரா ஆப்ரேஷன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த விபகாரத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆப்பரேஷன் கார்பன் மூலம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் இன்டர் போல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News