Begin typing your search above and press return to search.
ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 78 நாட்கள் தீபாவளி போனஸை அறிவித்த மத்திய அரசு!
இந்தியன் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

By :
இந்தியன் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இந்திய ரயில்வேயில் பணிபுரியும் தகுதி வாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்குவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸாக வழங்கப்படும். மொத்தம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறினார். இந்த அறிவிப்புக்கு ரயில்வே ஊழியர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
Source, Image Courtesy: Dinamalar
Next Story