5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் தேவையில்லை: மத்திய அரசு!
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையானது பல்வேறு நாடுகளை அச்சறுத்தி வருகிறது. இதன் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில், குழந்தைகள் மற்றும் சிறார் குறித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் சில அம்சங்கள் பற்றி பார்ப்போம்.
அதாவது 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகவசம் அணிய தேவையில்லை. மேலும் 6 வயது முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர்களின் நேரடி மேற்பார்வையில் பாதுகாப்பாகவும், சரியான முறையில் மாஸ்க் அணிய வைக்கலாம். 12 வயதுக்கு மேற்பட்டோர்கள் பெரியவர்களை போன்று மாஸ்க் அணிவது அவசியம். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆலோசனைகளை மருத்துவர்களிடம் பெறுவது அவசியம் ஆகும்.
Source: Maalaimalar
Image Courtesy: USA Today