தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு.!
தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு.!
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் 2 தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகளில் வெற்றி பெற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதனையடுத்து 50 வயதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட உளளது. தடுப்பூசி குறித்து வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இதனால் சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தும்படி, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடித்ததில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.
எனவே, தடுப்பூசி போடும் பணியினை வேகப்படுத்துங்கள். வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது தடுப்பூசி போடும் பணி நடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.