அஞ்சல் தேர்வுகளை தமிழில் எழுத மத்திய அரசு அதிரடி உத்தரவு.. உற்சாகத்தில் மாணவர்கள்.!
அஞ்சல் தேர்வுகளை தமிழில் எழுத மத்திய அரசு அதிரடி உத்தரவு.. உற்சாகத்தில் மாணவர்கள்.!
By : Kathir Webdesk
அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தமிழக மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இதற்கு முன்னதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதாவது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுதலாம் என குறிப்பிட்டிருந்தது. தமிழகத்தில் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழ் மொழியில் எழுதுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாணவர்கள் தங்களது கோரிக்கையில் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து இன்று தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை வட்டத்தில் நடைபெறும் தேர்வில் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான மாணவர்கள் தபால் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என கூறப்படுகிறது.