Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - தேர்தல் கமிஷனின் பரிந்துரை

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து உள்ள தேர்தல் கமிஷன் அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது.

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் - தேர்தல் கமிஷனின் பரிந்துரை
X

KarthigaBy : Karthiga

  |  2 Sep 2023 9:30 AM GMT

நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைத்து இருந்தது . பணியாளர் நலத்துறை நிலை குழு ஏற்கனவே ஆராய்ந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த இந்த ஆய்வின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷனரிடமிருந்து கருத்து கேட்கப்பட்டது. இதில் தேர்தல் கமிஷன் பல்வேறு பரிந்துரைகள் வழங்கி இருந்தது. இது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-


மக்களவையின் பதவிக்காலம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி ஐந்தாண்டுகளில் காலாவதியாகிவிடும் . மக்களவையின் பதவிக்காலம் முடியும் நாளில் மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் நிறைவேற வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு இடையில் மத்தியிலோ அல்லது மாநிலங்களிலோ அரசு கவிழும் பட்சத்தில் மீதமுள்ள காலத்துக்கும் என மாற்று அரசு அமைக்க வேண்டும் .


இது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலமா அல்லது புதிதாக தேர்தல் மூலமோ மீதமுள்ள காலத்திற்கு என அரசு அமைக்க வேண்டும் . அதாவது மக்களவை முன்கூட்டியே கலைப்பதை தடுப்பதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானத்துடன் ஒரு தனிநபரை அடுத்த பிரதமராக கொண்டு நம்பிக்கை தீர்மானமும் கொண்டுவரப்பட வேண்டும். பின்னர் இந்த ரெண்டு தீர்மானங்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் அவை கலைப்பு தவிர்க்க முடியாத பட்சத்தில் மீதமான காலத்துக்கு என புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் .


அதே நேரம் அவையின் மீதமுள்ள பதவி காலம் அதிகம் இல்லாத பட்சத்தில் ஜனாதிபதி தலைமையில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அவருக்கு உதவியாக மந்திரிகள் கவுன்சிலில் அவர் நியமித்துக் கொள்ளலாம். இதே நடைமுறையை மாநிலங்களிலும் கவர்னர்கள் மூலம் செயல்படுத்தலாம். இந்த விவகாரத்தில் புதிய தேர்தலா அல்லது ஜனாதிபதி ஆட்சியா என்பதை முடிவு செய்ய வேண்டும் .இடைத்தேர்தல் பொருத்தவரை ஆண்டுக்கு இருமுறை அல்லது ஒரு முறை என நடத்தலாம் இவ்வாறு தேர்தல் கமிஷன் தனது பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது.


SOURCE : DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News