இந்திய விமான போக்குவரத்தை வலுப்படுத்தவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்!
இந்திய விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.
By : Karthiga
இந்திய விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது. உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இவ்வளவு பெரிய பணியை மேற்கொள்ளும் ரயில்வே நிர்வாகம் தினம் தினம் தன்னை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில்தான் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை ரயில்வே துறை அறிவித்திருந்து. இதற்கு அமிர்த் பாரத் நிலையம் திட்டம் என்றும் பெயரிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக ரூ.24,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல மறுபுறம் இந்திய விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.
தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் (கதி சக்தி) துணைவேந்தர் பேராசிரியர் மனோஜ் சவுத்ரி மற்றும் ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ரெமி மைலார்ட் ஆகியோர் இணைந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 15,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷணவ் கூறியுள்ளார். எர்பஸ் நிறுவனம் உலகின் சிறந்த விமான போக்குவரத்து நிறுவுனமாகும். சர்வதேச அளவில் இரண்டு பெரும் விமான நிலையங்களில் இதுதான். ஒன்று போயிங், மற்றொன்று ஏர்பஸ். இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த நிறுவனத்துடன் ஏற்கெனவே இந்தியா ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
SOURCE:One india.com