ஊரடங்கு தளர்வுகள் அறிவித்தாலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.. மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.!
மக்களின் வாழ்வாதாரத்திற்கு தளர்வுகள் என்பது மிகவும் அவசயம்தான், இருந்த போதிலும் கண்காணிப்பை தவறவிட்டா மீண்டும் ஆபத்தை விளைவித்துவிடும். கொரோனா தடுப்பூசி தீவிரப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று நோய் குறைந்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் பின்னர் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது ஊரடங்கில் மீண்டும் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அதன் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எனவே மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அலட்சியம் காட்டக்கூடாது.
மேலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு தளர்வுகள் என்பது மிகவும் அவசயம்தான், இருந்த போதிலும் கண்காணிப்பை தவறவிட்டா மீண்டும் ஆபத்தை விளைவித்துவிடும். கொரோனா தடுப்பூசி தீவிரப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
