Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை தாக்கினால் வழக்கு: மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை தாக்கினால் வழக்கு: மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 Jun 2021 12:56 PM IST

மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்குபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் போன்றவை அவர்களின் மன உறுதியைக் மிகவும் குறைத்து பாதுகாப்பின்மையை குறைத்துவிடுகிறது.

எனவே மருத்துவர்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கக்கூடும். எனவே தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் மீது, 2020ம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News