கோவில்கள் மற்றும் வரலாற்று சின்னங்களை பார்வையிட 16ம் தேதி முதல் அனுமதி.. மத்திய அரசு.!
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.

By : Thangavelu
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களை வருகின்ற 16ம் தேதி முதல் பொதுமக்கள் சென்று பார்வையிடலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவில் மற்றும் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் வருகின்ற புதன்கிழமை (16ம் தேதி) முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றி பார்வையிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
