மதரீதியான வெறுப்புணர்வு பரப்பிய யூடியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி!
மதரீதியாக வெறுப்புணர்வை பரப்ப முயன்ற 10 யூடியூப் சேனல்களில் 45 வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
மதரீதியாக விழிப்புணர்வு பரப்பும் நோக்கத்துடன் போலீஸ் செய்திகள் மற்றும் மார்பில் செய்யப்பட்ட உள்ளடக்கங்களை கொண்ட பத்து யூடியூப் சேனல்களின் சுமார் 25 மேற்பட்ட வீடியோக்களை மத்திய அரசு முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேற்று வெளியிட்டு இருந்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி கருத்து கூறுகையில் முடக்கப்பட்ட வீடியோக்கள் குறிப்பிட்ட மதங்கள் மத்தியில் அச்சத்தையும் தவறான கருத்துக்களையும் பரப்பும் உள்ளடக்கத்தை கொண்டிருந்தன.
அந்த வீடியோக்கள் ஒட்டுமொத்தமாக சுமார் 1.30 கோடி பார்வையாளர்களை கொண்டிருந்தன. சில வீடியோக்கள் இந்தியா அக்னி பாத் திட்டம், காஷ்மீர் விவகாரம் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை குறித்து தவறான தகவல்களை மக்களுக்கு பரப்பும் நோக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. சில வீடியோக்கள் உள்ளடக்கம் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளுடன் இந்தியாவில் நட்புறவு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டது.
மேலும் சிக்கல்களை உருவாக்கும் விதமாகவும் காணப்பட்டது. முன்னதாக மத வாதத்தை உருவாக்க முயன்று 110 youtube சேனல் மற்றும் facebook கணக்குகளை அரசாங்கம் முடக்கிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே போல் தற்போது இந்த youtube சேனல்களும் முடக்கப்பட்டுள்ளது மத வாதத்திற்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கும் பரப்பும் மது ரீதியான வெறுப்புணர்ச்சியை புகட்டும் இத்தகைய யூடியூப் சேனல்கள் மீது மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடப்பட்டது.
Input & Image courtesy: Times of India