மத்திய அரசின் அசத்தல் காப்பீட்டு திட்டம் : இதுவரை ரூபாய் 61,501 கோடி இலவச சிகிச்சை
ஆயுஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் 61 ஆயிரத்து 501 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By : Karthiga
நமது நாட்டில் மத்திய அரசு 'ஏ.பி .பி எம். ஜெய் ' என்று அழைக்கப்படுகிற ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா என்ற சுகாதார காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது .இந்த சுகாதார காப்பீட்டு திட்டம் டெல்லி , ஒடிசா , மேற்கு வங்காளம் தவிர்த்து நாடு முழுவதும் தேசிய சுகாதார ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் அளவுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்த திட்டம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைமுறையில் இருக்கிறது. இதையொட்டி அறிக்கை ஒன்றை மத்திய அரசின் சார்பில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 23 கோடியே 39 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை பெறுவதற்கான ஆயுஷ்மான் சுகாதார அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அட்டை பெற்றவர்களில் 49 சதவீதத்தினர் பெண்கள் ஆவார்கள். இந்த திட்டத்தில் 28 ஆயிரத்து ஆஸ்பத்திரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் 1, 224 ஆஸ்பத்திரிகள் தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகும். 2022-23 நிதி ஆண்டில் மொத்த ஆஸ்பத்திரி சேர்க்கையில் 56 சதவீதம் தனியார் ஆஸ்பத்திரியிலும் 44 சதவீதம் அரசு ஆஸ்பத்திரிகளிலும் நடந்துள்ளது .
48 சதவீத ஆஸ்பத்திரி சேர்க்கை பெண்கள் தான் . பெண்களுக்கான 141 அறுவை சிகிச்சைகள் பட்டியலிடப்பட்டுள்ளன . இந்த திட்டத்தில் இதுவரை 5 கோடி பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சைகள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இதன் மூலம் 61 ஆயிரத்து 51 கோடி மதிப்புள்ள இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் மொத்தம் 27 வெவ்வேறு பிரிவில் 1949 அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள முடியும் .புற்றுநோய் அவசரகால சிகிச்சை, எலும்பு மருத்துவம் , சிறுநீரக மருத்துவம் ஆகிய சிகிச்சை தான் அதிகம் பெறப்பட்டுள்ளது .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.