ஒமைக்ரான் தொற்று எதிரொலி: மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை!
கொரோனா பெருந்தொற்று தற்போது ஒமைக்ரான வைரஸாக பரவி வருகிறதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
By : Thangavelu
கொரோனா பெருந்தொற்று தற்போது ஒமைக்ரான வைரஸாக பரவி வருகிறதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) January 2, 2022
➡️ Dr. Mansukh Mandaviya reviewed Public Health Preparedness to COVID19 and National #COVID19 Vaccination Progress with States/UT.
➡️ Test, Track, Treat, Vaccinate & COVID Appropriate Behaviour to be the mantra.https://t.co/dWLd3gNY5F pic.twitter.com/iosc0VP7PD
இதில் நாடு முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து பங்கேற்றனர். அதே போன்று தமிழகத்தின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் மாநில சுகாதாரத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும், தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதனை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Twiter