தடுப்பூசி ஏன் போடவில்லை.. நாட்டு மக்களுக்கு தகவலை வெளியிடுங்கள்.. ராகுலுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி.!
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் இன்னும் ஏன் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. எனவே உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். அதன்படி இன்று (ஜூன் 21) முதல் மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி. ராகுல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை. நீங்கள் இன்னும் ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. எனவே உடனடியாக தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும். இதனை உங்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.