ஜனவரியில் சென்ட்ரல் விஸ்டா கோலாகல திறப்பு விழா - தள்ளிப்போவது ஏன்?
புதிய நாடாளுமன்ற கட்டிடமான சென்ட்ரல் விஸ்டாவின் திறப்பு விழா 2023 ஜனவரி மாத இறுதியில் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

By : Mohan Raj
புதிய நாடாளுமன்ற கட்டிடமான சென்ட்ரல் விஸ்டாவின் திறப்பு விழா 2023 ஜனவரி மாத இறுதியில் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடமான 'சென்ட்ரல் விஸ்டா' 1250 கோடி ரூபாய் செலவில் வேகமாக தயாராகி வருகிறது. இதற்காக கட்டுமான பணிகள் ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகம் அடங்கிய 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை மத்திய அரசு மிக வேகமாக செயல்படுத்தி வருகிறது.
இதற்கு பிரதமர் மோடி 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். இதுவரை 70 சதவிகித கட்டுமான பணிகள் முடிந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் திறப்பு விழா வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் தான் திறப்பு விழா வரும் ஜனவரி மாதத்திற்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.
புதிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும் சில பணிகள் நிறைவடையாத காரணத்தினால் இது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத கடைசி வாரத்தில் பார்லிமென்ட் கூட்டத்துடன் துவங்கி திறப்பு விழா நடத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
