ஆப்கானிஸ்தான்: இந்தியர்களை பத்திரமாக மீட்ட மத்திய அரசின் துரித செயல் !
பெரும் சர்ச்சையைக் கிளப்பும் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் பகுதியில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசின் துரிதமாக செயல்.
By : Bharathi Latha
தற்போது உலக அளவில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயங்களை ஒன்றாக உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகரை காபூலை தலிபான்கள் தீவிரவாதிகள் கைப்பற்றிய ஒரு செய்திதான். காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நகரிலிருந்து கடைசி ஏர் இந்தியா விமானம் டில்லிக்கு புறப்பட்டு 129 இந்தியர்களும் இரவு பத்திரமாக தாயகம் திரும்பினர். இதற்கு மத்திய அரசின் துரித நடவடிக்கைகளை காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்க இரட்டை கோபூர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்க படைகள் தலிபான்களை காபூலிலிருந்து விரட்டி அடித்தது. தற்போது ஆப்கானிஸ்தானை விட்டுவிட்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி வரும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு காபூலுக்குள் மீண்டும் தலிபான்கள் நுழைந்துள்ளனர். நாலாபுறங்களிலிருந்தும் தலைநகருக்குள் அவர்கள் நுழைந்து கொண்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி ராய்டர்ஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் தங்களின் தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் திரும்ப அழைத்துக் கொண்டது. இந்தியாவிற்கான கடைசி ஏர் இந்தியா விமானமும் காபூலிலிருந்து தற்போது புறப்பட்டு 129 இந்தியர்களும் பத்திரமாக டெல்லியை வந்தடைந்தனர்.
Input: https://www.bbc.com/news/world-asia-india-58228280.amp
Image courtesy:BBC news