Kathir News
Begin typing your search above and press return to search.

உடனே விலையை குறைச்சாகணும்! மத்திய அரசு போட்ட ஆர்டர் - மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அறிவிப்பு!

உடனே விலையை குறைச்சாகணும்! மத்திய அரசு போட்ட ஆர்டர் - மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அறிவிப்பு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2022 6:42 AM IST

உணவு மற்றும் பொது விநியோகத் துறை, சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் ரூ.15-ஐ உடனடியாக அமலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மற்ற பிராண்டுகளை விட விலை அதிகமாக உள்ள, விலையைக் குறைக்காத சில நிறுவனங்கள், அவற்றின் விலையைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தின் போது, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிச் செல்வது, மிகவும் சாதகமான நிலை என்றும், எனவே, உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலைக்குறைப்பை உள்நாட்டு சமையல் எண்ணெய் தொழில்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த விலை வீழ்ச்சியை நுகர்வோர்களுக்கு ஒரு பின்னடைவு இல்லாமல் விரைவாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. விலை விவரங்கள் சேகரிப்பு, சமையல் எண்ணெய்கள் மீதான கட்டுப்பாட்டு ஆணை மற்றும் சமையல் எண்ணெய்களின் பேக்கேஜிங் போன்ற மற்ற விஷயங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மே மாதம் முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுடன் துறை நடத்திய கூட்டத்தில், ஃபார்ச்சூன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை ரூ.220-லிருந்து ரூ. 210 –ஆகக் குறைக்கப்பட்டது.

சோயாபீன் (பார்ச்சூன்) மற்றும் கச்சி கானி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை ரூ.205- லிருந்து ரூ. 195ஆக குறைக்கப்பட்டது. சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, எண்ணெய் விலை குறைப்பு ஏற்பட்டது. குறைக்கப்பட்ட வரியின் முழுமையான பலன் நுகர்வோருக்கு மாறாமல் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு எண்ணெய் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு சமையல் எண்ணெய்களின் உலகளாவிய விலைகள் டன் ஒன்றுக்கு 300-450 அமெரிக்க டாலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், ஆனால் சில்லறை சந்தைகளில் பிரதிபலிக்க நேரம் எடுக்கும் என்றும், சில்லறை விலைகள் வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தொழில்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் சமையல் எண்ணெய் விலை மற்றும் கிடைக்கும் நிலைமையை துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன் மூலம் நுகர்வோர் தங்கள் பட்ஜெட்டில் கூடுதல் பணத்தை சேமிக்க முடியும் எதிர்பார்க்கலாம்.

Input From: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News