இனி நம்ம தான் எல்லாமே..! ஏற்றுமதிக்கு குறி வைக்கும் இந்தியா - கட்டணங்கள் மற்றும் வரிகளுக்கு குட் பை..!
Centre Notifies RoDTEP Scheme Guidelines and Rates. Scheme to boost our exports & competitiveness
By : Muruganandham
ஏற்றுமதிப் பொருட்கள் மீதான கட்டணங்கள் மற்றும் வரிகளில் இருந்து நிவாரணமளிக்கும் (RoDTEP) எனப்படும் திட்டத்தின் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. சர்வதேச சந்தைகளில் நமது ஏற்றுமதிகளையும், போட்டித்திறனையும் இத்திட்டம் ஊக்குவிக்கும்.
உள்நாட்டுத் தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அவற்றை சர்வதேச சந்தைகளில் அதிகப் போட்டித்திறன் மிக்கவையாக மாற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
போட்டித் திறனை அதிகரிப்பதற்காகவும், ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்காகவும் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் சீர்திருத்தப்பட்டு, சிறப்பான செயல்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்சார்பு இந்தியாவைக் கட்டமைக்கும் நமது லட்சியத்திற்கு இவை பெரிய அளவில் உதவும்.
ஏற்றுமதி பொருள்கள் மீதான இத்தகைய சீர்திருத்தமான கட்டணங்கள் மற்றும் வரிகளில் இருந்து நிவாரணமளிக்கும் திட்டமானது வரிகளும், கட்டணங்களும் ஏற்றுமதி செய்யப்படக்கூடாது.
மாறாக, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மிதான வரிகளும், கட்டணங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும் என்ற உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையிலானது.
தற்போது திரும்பச் செலுத்தப்படாதவற்றைத் திரும்ப அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தகுதியுடைய அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைக்கும். எளிமைப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பின் மூலம் இது செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் இந்திய ஏற்றுமதிகளுக்கு ஊக்கம் கிடைக்கும்.