நேரடி கண்காணிப்பில் வந்த விலை நிலவரம் - அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!
Centre rationalized the duty structure on edible oils by reducing the effective duties
By : Muruganandham
நாடு முழுவதும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் மத்திய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 179 விலைக் கண்காணிப்பு மையங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகளை அரசாங்கம் கண்காணிக்கிறது. விலைப் போக்குகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் கிடைப்பதை அதிகரிக்கவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நிலைப்படுத்தவும் அரசு அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பல காரணங்களால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. தேவைக்கும், விநியோகத்துக்கும் சமநிலையற்ற தன்மை ஏற்படும்போது, விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படும்போது, விளைச்சல் பருவ மாறுபாடுகள், கள்ளச் சந்தையில் பதுக்குவதன் மூலம் செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாடு, சர்வதேச சந்தையில் விலை உயர்வு ,போன்றவை காரணமாக உணவுப் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன.
சில சமயங்களில் சப்ளை சங்கிலியில் ஏற்படும் சிறிய இடையூறுகள் அல்லது கனமழை காரணமாக சேதம் ஏற்படுவதால், வேளாண்-தோட்டக்கலைப் பொருட்களின் விலைகள் உயரும். மாறாக தற்போது சம்பந்தமே இல்லாமல் சில நேரங்களில் விலை அதிகரிக்கிறது.
இதனை கட்டுப்படுத்த 22 அத்தியாவசிப் உணவு பொருட்களின் சில்லரை மற்றும் மொத்த விலையை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதற்காக 172 விலை கண்காணிப்பு மையங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அவ்வப்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விலையை கண்காணிப்பது, பொருட்களின் இருப்பு நிலவரத்தை தெரியப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மாநிலங்களுக்கு கடந்த மே மாதம் வழங்கப்பட்டன.துவரை, உளுந்து, பாசி பருப்பு ஆகியவற்றை தடையின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
வெங்காய விலையை கட்டுப்படுத்த, 2.08 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.