தலைவர்களிடமிருந்து இறுதி உத்தரவு வரும் வரை போராட்டம் தொடரும் - பிரதமர் வேளாண் சட்டத்தை ரத்து செய்த பின்னரும் பின்வாங்க மறப்பு!
Centre seeks farmer names for MSP panel as protestors prepare to retreat from Delhi borders
By : Muruganandham
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான குழுவுக்கு விவசாய சங்கங்களிடமிருந்து ஐந்து பெயர்களை மத்திய அரசு கோரியுள்ளது.
பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்திற்குப் பிறகு, சம்யுக்தா கிசான் மோர்ச்சா உறுப்பினர் ஹரிந்தர் சிங் லகோவால் கூறுகையில், "கமிட்டி அமைக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து விவசாயிகளின் பெயர்களை வழங்குமாறு மத்திய அரசு எங்களிடம் கேட்டுள்ளது. பெயர்களை நாங்கள் முடிவு செய்யவில்லை. சம்யுக்தா கிசான் மோர்ச்சா டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பெயர்களை முடிவு செய்யும் எனக்கூறியுள்ளார்.
மேலும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று நம்புகிறோம் என்று கூறினார். ஹரியானாவில் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறலாம் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
நாளை, ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் குழு கட்டாரை சந்திக்க வாய்ப்புள்ளது. போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற ரயில்வே, சண்டிகர் நிர்வாகம் மற்றும் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று விவசாயி தலைவர் கூறினார்.
"போராட்டத்தின் போது இறந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் நிதி தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டுள்ள விவசாயிகள் சிலர் வீடு திரும்புவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாங்கள் எங்கள் லாரிகளில் எங்கள் பொருட்களை ஏற்றிவிட்டோம், ஆனால் தலைவர்களிடமிருந்து இறுதி உத்தரவு வரும் வரை போராட்டத்தில் இருப்போம். கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல் இங்கு வருகிறோம்,'' என்றார் விவசாயி ஒருவர்.
நிலுவையில் உள்ள அனைத்து கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் எஸ்கேஎம் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். கூட்டத்தில் இயக்கத்தின் வியூகத்தை ஆராய்ந்து அதன்படி அறிவிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.