சாத் பூஜா சிறப்பு தபால் தலை: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார்.!
சாத் பூஜா சிறப்பு தபால் தலை: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார்.!

By : Rama Subbaiah
என் தபால்தலை என்பது அஞ்சல் துறையின் ஓர் புதுமையான முயற்சியாகும். இதன்படி தனி நபரோ அல்லது நிறுவனமோ தங்களது புகைப்படத்தைத் தபால் தலையாகப் பெற்றுக் கொள்ளலாம்.இதன்படி “சாத் பூஜா குறித்த என் தபால் தலை” என்ற சிறப்பு தபால் தலையை மத்திய தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார்.
சாத் பூஜா குறித்த என் தபால் தலை, நாட்டில் உள்ள அனைத்து தபால் தலை மையங்களிலும், முக்கிய அஞ்சல் அலுவலகங்களிலும் கிடைக்கும். ‘சாத்- எளிமை மற்றும் சுகாதாரத்தின் சின்னம்' என்ற கருப்பொருளில் சிறப்பு உரையும் இன்று வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், பெருந்தொற்றுக் காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனாளிகளுக்கு பணத்தை அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கிய அஞ்சல்துறைக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுபோல பல்வேறு பிரபல பண்டிகைகளின் வரலாற்றையும் தபால்தலையில் வெளியிடுவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பண்டிகை காலங்களின் முக்கியத்துவம். அவசியம் இவற்றை அடுத்த தலைமுறைக்கும், புதிய தலைமுறைக்கும் உணர்த்தும் விதத்தில் அஞ்சல் துறையின் செயல்பாடுகள் புதுமையாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சென்ற ஆகஸ்ட் 5- ந தேதி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீராமர் கோவில் குறித்த ஸ்டாம்ப் ஒன்றை நிகழ்ச்சி அடையாளமாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
